தன்னியக்க பணப் பரிவர்த்தனை இயந்திரங்கள் ஊடாக வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பணத்தைப் பெற்றுக்கொள்ளும் வசதி நிறுத்தப்பட்டுள்ளதால் வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கையர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர் என்று கூறப்படுகின்றது.
வெளிநாடுகளுக்குப் பயணமாகும் இலங்கையர்கள்(குறிப்பாக மாணவர்கள்), இலங்கையில் உள்ள தங்களின் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை, வங்கி அட்டைக்களைப் பயன்படுத்தி பெறும் வசதி இதுவரை செயற்பாட்டில் இருந்தது.
நாடு தற்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், அந்த வசதி எந்த வித முன்னறிவித்தலும் இன்றி நிறுத்தப்பட்டுள்ளது என்று தெரியவருகின்றது.
வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, கற்றல் நடவடிக்கைகளுக்குச் சென்றுள்ள இலங்கையர்கள் தற்போது பணத்தைப் பெற முடியாது பெரும் இக்கட்டான நிலைமையில் உள்ளனர் என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
Discussion about this post