இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபைக்கூட்டம் இன்று (30) கொட்டகலையில் நடைபெறவுள்ளது.
காங்கிரஸின் பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் புதிய தலைவர் தெரிவுசெய்யப்படவுள்ளார்.
தலைமைப்பதவிக்கு இருமுனைப்போட்டி நிலவினாலும் நேற்று நிலைமை சீர்செய்யப்பட்டுள்ளது.
போட்டியின்றி கட்சித் தலைவரை ஏகமனதாக தெரிவுசெய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி இ.தொ.காவின் புதிய தலைவராக செந்தில் தொண்டமான் நியமிக்கபடவுள்ளார்.
பொதுச்செயலாளர் பதவியில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தொடர்வார். நிதிச்செயலாளர் பதவியை நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் தக்கவைத்துக்கொள்ளவுள்ளார்.
அத்துடன், பிரதித் தலைவர், தவிசாளர் மற்றும் உப தலைவர்கள் தெரிவும் இன்று இடம்பெறவுள்ளது.
Discussion about this post