இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் தொடர்பில் மிக உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
புதிதாக நியமிக்கப்படும் இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் தொடர்பில் மிக உன்னிப்பாக அவதானிக்கப்படுகின்றது என்றும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
புதிதாக நியமிக்கப்படும் நிதி அமைச்சரின் அமெரிக்கப் பயணத்தின் போது, எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தமது அதிகாரிகள் தயாராகவுள்ளனர் என்று சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழு தலைவர் மஷாஹிரோ ஹிசாக்கி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிகல நேற்றுத் தமது பதவியில் இருநது விலகியுள்ளார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளித்துள்ளார்.
நேற்றுமுன்தினம் நிதியமைச்சராகப் பதவியேற்ற ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, நேற்று அந்தப் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
Discussion about this post