லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்திடம் இருந்து உரிய நேரத்தில் 6 ஆயிரம் மெற்றிக்தொன் டீசல் கிடைக்காவிட்டால் இன்று 16 மணிநேரம் அல்லது அதற்கு அதிகமான நேரம் மின்சாரம் தடைப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய மின்வெட்டை இரண்டு மணித்தியாலங்களால் குறைப்பது தொடர்பாகக் கவனம் செலுத்தியுள்ள அரசாங்கம், லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்திடம் இருந்து 6 ஆயிரம் மெற்றிக்தொன் டீசலைப் பெறத் திட்டமிட்டுள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உரிய எரிபொருளைக் கொள்வனவு செய்து, நேரடியாக மின் உற்பத்திக்கு வழங்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று இரவு 11 மணிக்கு முன்னதாக எரிபொருளை மின்சார சபையிடம் ஒப்படைப்ப எதிர்பார்க்கப்பட்டிருந்தது. உரிய நேரத்தில் எரிபொருள் கிடைத்தால், மின்வெட்டு நேரத்தைக் குறைக்க முடியும் என்று மின்சார சபை தெரிவித்துள்ளது.
Discussion about this post