இலங்கைக்கும் இத்தாலிக்குமிடையில் வர்த்தகம், முதலீட்டு உறவுகள்,
சுற்றுலா மற்றும் மக்களுக்கிடையிலான தொடர்புகளை மேலும் விரிவாக்குவது
குறித்து இரு தரப்பு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கைக்கான இத்தாலியின் தூதுவர் ரீட்டா கியுலியானா மனெல்லா மற்றும்
வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்
ஆகியோருக்கிடையிலான சந்திப்பு அண்மையில் இடம்பெற்றது. இதன்போதே இவ்விடயம்
குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் பிராந்திய மற்றும் பல்தரப்பு ஈடுபாடுகள் குறித்து இத்தாலி
தூதுவருக்கு அமைச்சர் விளக்கியதுடன், பரஸ்பர நலன் சார்ந்த விடயங்களில்
நெருக்கமான உரையாடலையும் ஒத்துழைப்பையும் தொடர்வதற்கும் இதன்போது
ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்த சந்திப்பில் வெளிநாட்டு அமைச்சின் சிரேஷ்ட
அதிகாரிகளும் பங்கேற்றனர்.
Discussion about this post