இலங்கையில் கொவிட் தடுப்பூசி ஏற்றும் போது வழங்கப்பட்ட சுகாதார அட்டையை தம்முடன் வைத்துக் கொள்வதனை கட்டாயமாக்குவதற்கு கொவிட் தடுப்பு செயலணியின் அவதானம் செலுத்தியுள்ளது.
அதற்கமைய அரச நிறுவனங்கள் போன்று சுப்பர் மார்க்கெட்களில் நுழைவதற்கு இந்த அட்டையை தம்முடன் வைத்திருப்பது மிகவும் முக்கியம் என சுகாதார பிரிவு பிரதானிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது தொடர்பில் நேற்று கொவிட் தடுப்பு பிரிவு கூட்டத்தில் கலந்துரையாடப்படுகின்றது. கொவிட் தடுப்பிற்காக எதிர்வரும் நாட்களில் சட்டங்களை அறிமுகப்படுத்தி வைக்கவுள்ளதாக ஜனாதிபதி பிரதான ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
Discussion about this post