Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home ஆன்மீகமும் ஜோதிடமும்

இன்றைய ராசிபலன்- 01.04.2022

April 1, 2022
in ஆன்மீகமும் ஜோதிடமும்
இன்றைய ராசிபலன்- 28.02.2022
0
SHARES
Share on FacebookShare on Twitter

மேஷம்

குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். யாருக்கும் பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். சகோதர வகையில் பிணக்குகள் வரும். உடல்நலம் பாதிக்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். கவனம் தேவைப்படும் நாள்.

ரிஷபம்

தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வீட்டை அழகுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். தைரியமான முடிவு எடுக்கும் நாள்.

மிதுனம்

எதிர்பாராத சந்திப்பு நிகழும். வாகன வசதி பெருகும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். சாதிக்கும் நாள்.

கடகம்

உங்கள் செயலில் வேகம்கூடும். பிள்ளைகளால் மதிப்பு கூடும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

சிம்மம்

சந்திராஷ்டமம் இருப்பதால் முன் கோபத்தை குறையுங்கள். தனிப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை ஓரளவு குறையும் . திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.

கன்னி

மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்துபோகும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். சகோதரர்கள் உதவிகரமாக இருப்பார்கள். மகிழ்ச்சியான நாள்.

துலாம்

எதிர்பாராத பண வரவு உண்டு. உறவினர் நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். அதிகாரப் பதவியில் இருப்பார்களின் நட்பு கிடைக்கும். சொத்து வாங்குவது விற்பது குறித்து யோசிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

விருச்சிகம்

மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பழைய கடன் பிரச்சினையில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். நினைத்தது நிறைவேறும் நாள்.

தனுசு

எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். நெருங்கியவர்க ளுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். தடைகள் உடைபடும் நாள்.

மகரம்

உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். சொந்தபந்தங்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். சிறப்பான நாள்.

கும்பம்

குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வேண்டிய உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.

மீனம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திட்டமிடாத செலவுகளும் பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களின் அணுகு முறையை மாற்றுங்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி ஆலோசனையை ஏற்றுக் கொள்வது நல்லது. கவனம் தேவைப்படும் நாள்.

Tags: இன்றுமீனம்மேடம்ராசிபலன்
Previous Post

The Battle Over Hot Latin Girl And Just How To Get It

Next Post

ஏப்ரல் மாதத்துடன் மின்வெட்டு குறையுமாம்!! – மின்சார சபை கூறுகின்றது!!

Next Post
ஏப்ரல் மாதத்துடன் மின்வெட்டு குறையுமாம்!! – மின்சார சபை கூறுகின்றது!!

ஏப்ரல் மாதத்துடன் மின்வெட்டு குறையுமாம்!! - மின்சார சபை கூறுகின்றது!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.