Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home ஆன்மீகமும் ஜோதிடமும்

இன்று ஆரம்பமாகும் குரு வக்ர பெயர்ச்சி! அடுத்த 4 மாதத்துக்கு இந்த ராசிக்கார்கள் எல்லாம் கொஞ்சம் கவனமா இருங்க

July 3, 2021
in ஆன்மீகமும் ஜோதிடமும்
0
SHARES
Share on FacebookShare on Twitter

 2021 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி குரு பகவான் அதிசார பெயர்ச்சியை முடித்து, கும்ப ராசியில் இருந்து மகர ராசிக்கு செல்ல வக்ர நிலை அடைகிறார். குருவின் இந்த வக்ர நிலை ஒவ்வொருவரது வாழ்விலும் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வரும்.

சிலருக்கு இந்த குரு வக்ர பெயர்ச்சி காலமானது சவால் நிறைந்ததாக இருக்கும். நவகிரகங்களில் செவ்வாய், புதன், சுக்கிரன், குரு, சனி ஆகிய 5 கிரகங்களும் வக்ரமடைவார்கள்.

கிரகங்கள் வக்ரமடைவது என்பது பின்னோக்கி செல்லும் காலத்தை தான் குறிக்கிறது. இந்த வக்ர நிலையில் கிரகங்களானது மிகவும் மெதுவாக நகரும். ஒவ்வொரு 13 மாதங்களுக்கும் குரு சுமார் நான்கு மாதங்களுக்கு பிற்போக்கில் செல்லும்.

இப்போது கும்ப ராசியில் குரு வக்ர நிலையில் மாறி மகரத்தை நோக்கி செல்லும் காலத்தில் ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் இக்காலத்தில் ஆசைகள், எதிர்பார்ப்பு மற்றும் கனவுகளை நிறைவேற்றுவதில் சிரமப்படுவார்கள். இந்த காலகட்டத்தில் நீங்கள் எதை எதிர்பார்க்கிறீர்களோ அது தாமதமாகலாம் அல்லது எதிர்பார்த்த முடிவுகளைப் பெற முடியாது.

நிதி ரீதியாக, நீங்கள் சில சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடும். உறவுகளைப் பொறுத்தவரை, உறவு வாரியாக, எந்தவிதமான தவறான புரிதலையும் தவிர்க்க உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சரியான தகவல்தொடர்புகளைப் பேண அறிவுறுத்தப்படுகிறது. திருமணம் செய்து கொள்ள விரும்புவோர், குரு வக்ர காலம் முடியும் வரை காத்திருக்க வேண்டும்.

ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சாதகமான காலமாகும். இருப்பினும், சரியான உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிக்க அறிவுறுத்தப்படுகிறது.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் பொறுமையை கையாள வேண்டும். எதை செய்யும் போதும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த காலகட்டத்தில் நீங்கள் நிறைய போராட வேண்டியிருக்கும்.

மேலும் உங்கள் பேசும் போது அனைவருக்கும் மரியாதை கொடுத்து பேச அறிவுறுத்தப்படுகிறது. தொழில் ரீதியாக, எந்தவொரு புதிய திட்டத்தையும் தொடங்க வேண்டாம்.

பணிபுரிபவர்கள், வேலையை மாற்ற வேண்டாம். வணிகர்களுக்கு சிறந்த தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆனால் நன்மைகளை கிடைக்க கொஞ்சம் தாமதமாகலாம்.

இக்காலத்தில் குடும்ப சூழல் மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருக்கும்.

மிதுனம்

உயர் கல்வியைத் தொடர விரும்பும் மிதுன ராசிக்கார மாணவர்களுக்கு இடையூறு ஏற்படும். குரு வக்ர பெயர்ச்சி காலம் உங்களுக்கு வேறுபட்ட நம்பிக்கை முறையைத் தரும்.

தொழில் ரீதியாக, வேலை இல்லாதவர்கள் அல்லது புதிய வேலையை எதிர்பார்ப்பவர்களுக்கு, புதிய வாய்ப்புக்கள் கிடைக்கலாம். ஆனால் சிறிது தாமதம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை காக்க அறிவுறுத்தப்படுகிறது.

இக்காலத்தில் உங்கள் குடும்பத்தின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். மேலும் உங்கள் குழந்தைகள் மற்றும் சகோதரர்களிடமிருந்து உங்களுக்கு முழு ஆதரவும் கிடைக்கும். கடின உழைப்பின் மூலம் உங்கள் ஆசைகளை பூர்த்தி செய்வீர்கள். மேலும் இதுவரை சந்தித்த சிக்கல்களில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு வரி பணத்தால் நன்மை கிடைக்கும். ஆனால் அது தாமதமாக இருக்கும். காப்பீட்டு சலுகைகளைப் பெற, நீங்கள் கூடுதல் முயற்சி எடுக்க வேண்டும்.

இக்காலத்தில் பாலியல் வாழ்க்கையில் சில அதிருப்தி இருக்கலாம். மேலும் இக்காலத்தில் உங்களின் ஆன்மீக நம்பிக்கைகள் பூர்த்தி செய்யப்படாமல் போகலாம். இதனால் மனதில் அமைதியின்மை ஏற்படலாம்.

ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடல்நலம் தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்படக்கூடும் என்பதால் தங்களை கவனித்துக் கொள்ள வேண்டும். தேவையற்ற விஷயங்களில் ஆற்றலை வீணாக்குவதை விட, சில பயனுள்ள விஷயங்களுக்கு ஆற்றலைப் பயன்படுத்துவது நல்லது.

சிம்மம்

திருமணமாகாமல் வாழ்க்கைத் துணையைத் தேடும் சிம்ம ராசிக்காரர்கள், தாராள மனப்பான்மை கொண்ட ஒருவரைக் காணலாம். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையுடன் சுதந்திரத்தை பெறலாம். ஆனால் அந்த சுதந்திரம் சில கட்டுப்பாடுகளுடன் இருக்கும். இரண்டாவது திருமணத்திற்கு காத்திருப்பவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையைக் காணலாம்.

பணிபுரிபவர்கள், இக்காலத்தில் வேலையை மாற்ற நினைத்தால், அதற்கு இது சாதகமான காலம் அல்ல. பணிபுரிபவர்கள் தங்கள் சகாக்களுடன் சில மோதல்களைக் கொண்டிருக்கலாம்.

நிதியைப் பொறுத்தவரை, பொருளாதார நிலைமைகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். இக்காலத்தில் பண நன்மைகள் கிடைக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் வலுவாக இருப்பார்கள். இது அவர்களின் குறைபாடுகளையும் எதிரிகளையும் சிறந்த முறையில் எதிர்த்துப் போராட உதவும்.

ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சில சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடும். குறிப்பாக இரத்த சர்க்கரையால் பாதிக்கப்படலாம். மேலும் உடல் எடை சிறிது அதிகரிக்கும்.

வணிகர்கள், பணிச்சூழலில் நிறைய சுமைகளை சந்திக்க நேரிடும். சக ஊழியர்கள் உங்களுக்கு உதவமாட்டார்கள். நீங்கள் ஏதேனும் போட்டியில் கலந்து கொண்டால், கடின உழைப்பின் மூலம் வெற்றி அடைய முயற்சி செய்யுங்கள்.

திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் குரு வக்ர காலத்தில் காதல் வாழ்க்கையில் சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடும்.

திருமணமானமாகி குடும்பத்தை விரிவுபடுத்த விரும்புபவர்கள் தங்கள் திட்டங்கள் தாமதமாவதைக் காணலாம். இக்காலத்தில் எந்தவிதமான ஊகங்களுக்கும் சூதாட்டத்திற்கும் ஆளாகாமல் இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

ஏனெனில் இந்த விஷயங்கள் அவர்களுக்கு ஆபத்தை அதிகரிக்கும் மற்றும் பெரிய இழப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே கவனமாக இருக்க வேண்டிய காலம் இது

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் இக்காலத்தில் தங்களைப் பற்றி மிகவும் பெருமையாகவும், அகங்காரமாகவும் மாறக்கூடும். இதனால் தேவையில்லாமல் எதிரிகள் உருவாகுவார்கள்.

நிதியைப் பொறுத்தவரை, கடின உழைப்பால் வெற்றிகளையும் புகழையும் அடைவீர்கள். இக்காலத்தில் தாயுடனான உறவு ஆரோக்கியமானதாக இருக்காது. வாகனம் தொடர்பான சில சிக்கல்களை சந்திக்கலாம். இக்காலத்தில் சொத்துக்களை வாங்குவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து ஆதரவைப் பெறுவீர்கள்.

இருப்பினும், மேற்கொண்ட கடின உழைப்பின் விளைவு தாமதமாகலாம். அதுவும் எதிர்பார்த்ததை விட மிகவும் மெதுவாக கிடைக்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, பலவீனமாக இருப்பீர்கள்.

ஆனால் நிதி நிலை மேம்படக்கூடும். இந்த குரு வக்ர பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்கள் மரியாதையைப் பெறுவார்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் தங்கள் உடன்பிறப்புகளுடன் சில சிக்கல்களைச் சந்திக்கக்கூடும்.

இதனால் இக்காலத்தில் உடன்பிறப்புகளுடனான உறவு சற்று மோசமாக இருக்கும். நிதி ரீதியாக, உங்கள் நிதியை இக்கால கட்டத்தில் சரியாக நிர்வகிக்க முடியும். இதனால் நீங்கள் உங்களை நினைத்து பெருமை அடைவீர்கள்.

இதனால் இது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே அதிகம் பெருமை கொள்ளாமல் இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இக்காலத்தில் புதிய விஷயங்களைக் கற்று கொள்வதற்கு சற்று நேரம் எடுக்கலாம்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் சில அசாதாரண செலவுகளை சந்திக்க நேரிடும். இது நிதி ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி வாழ்க்கை முறையை சீர்குலைக்கக்கூடும். இந்த காலகட்டத்தில், முன்னோர்களின் சொத்தை வாரிசாக பெறலாம்.

இருப்பினும், அந்தச் சொத்தைப் பயன்படுத்த முடியாமல் போகலாம். குருவின் இந்த வக்ர நிலை இக்காலத்தில் சில பாதுகாப்பு சிக்கல்களை கொண்டு வரக்கூடும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் இந்த குரு வக்ர பெயர்ச்சியால் கல்லீரல் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படலாம். இக்காலத்தில் உங்களைச் சுற்றியுள்ளவர்களை நீங்கள் புரிந்து கொள்ளமாட்டீர்கள்.

யாரோ நம்மை ஏமாற்ற முயற்சிக்கிறார்கள் என்று கூட தோன்றலாம். இந்த குரு வக்ர பெயர்ச்சி காலம் இந்த ராசிக்காரர்களுக்கு அனைத்து விஷயங்களிலும் நன்மைகளைத் தராது.

எதிர்பார்க்கும் வாய்ப்புக்கள் இல்லாமல் போகும் போது விஷயங்கள் தாமதமாகலாம். இருப்பினும், இந்த காலகட்டத்தில் புத்தி, நுண்ணறிவு, ஆரோக்கியம் மற்றும் அதிர்ஷ்டம் மேம்படக்கூடும்.

மேலும் அவை இன்னும் கவர்ச்சிகரமானதாக மாறக்கூடும்.

மீனம்

குரு வக்ர பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு உயர்ந்த ஞானத்தையும், புத்தியையும் அடைய விரும்புவோருக்கு நன்மை பயக்கும். தியானம் மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்களுக்கு நன்மை பயக்கும்.

இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் அச்சமின்றி இருப்பார்கள். எந்த ஒரு விஷயத்தையும் எளிதில் விட்டுவிடமாட்டார்கள். மேலும் இக்காலத்தில் தங்களின் எதிரிகளை வெல்வார்கள் மற்றும் மத நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டுவார்கள். அதோடு அதிகமான எதிர்பார்ப்புகளால் விரக்தி அடையவும் வாய்ப்புள்ளது.

Previous Post

Google மற்றும் Apple ஆப் ஸ்டோரில் போலியான App-ஐ கண்டுபிடிப்பது எப்படி?

Next Post

ஆரோக்கியமான கீழ்ப்படியும் கூந்தலுக்கு

Next Post

ஆரோக்கியமான கீழ்ப்படியும் கூந்தலுக்கு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.