அரசாங்க ஊழியர்களின் இந்த மாத வேதனத்தை வழங்குவதில் கடும் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது என்று அரச உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்க ஊழியர்களுக்கான இந்த மாதச் சம்பளத்தை வழங்குவதற்குத் தேவையான பணக் கையிருப்பு இலங்கை மத்திய வங்கியிடம் இல்லை என்று தெரியவருகின்றது.
புதிதாகப் பணம் அச்சடிக்கப்பட்டோ அல்லது ஏதேனும் ஒரு வர்த்தக வங்கியிடம் கடன் பெற்றோதான் அரச ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்க வேண்டிய நிலைமை உள்ளது என்றும், நிதி அமைச்சர் ஒருவர் இல்லாத நிலையில் இந்த இரண்டு விடயங்களும் சாத்தியப்படாது என்றும் கூறப்படுகின்றது.
இதனால் அரச ஊழியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் வழங்குவதில் கடும் நெருக்கடி நிலைமை தோன்றியுள்ளது என்று அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவ்வாறு அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க அரசாங்கம் தவறினால், அது நாடாளவிய ரீதியில் பெரும் குழப்பங்களைத் தோற்றுவிப்பதால் அரச நிர்வாகம் ஸ்தம்பிதமடையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
அத்துடன், பொருளாதார ரீதியிலும் பெரும் நெருக்கடி நிலை தோன்றக் கூடுமென்றும் கூறப்படுகின்றது.
Discussion about this post