ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
கட்சியின் இந்த முடிவு ஆளுங்கட்சி, எதிரணிகள் மற்றும் சுயாதீன குழுக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன என்று காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் நேற்று அறிவித்துள்ளார்.
2019 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், 2020 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலிலும் அரசுடன் கூட்டணி அமைத்து மொட்டு சின்னத்தில் போட்டியிட்டது.
நுவரெலியா மாவட்டத்திலிருந்து ஜீவன் தொண்டமானும், மருதபாண்டி ராமேஸ்வரனும் தெரிவாகினர். இம்முறை நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள தமிழ் உறுப்பினர்களில் ஒரு லட்சத்துக்கும் மேல் விருப்பு வாக்குகளைப் பெற்று சபைக்கு தெரிவான தமிழ் வேட்பாளராக ஜீவன் தொண்டமான் திகழ்கின்றார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசுக்கு எதிரான ஆதரவை ஏப்ரல் 5 ஆம் திகதி இ.தொ.கா. மீளப்பெற்றுக்கொண்டது. நாடாளுமன்றத்தில் சுயாதீன அணியாக செயற்பட்டது.
எனவே, அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை அக்கட்சி ஆதரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ‘நடுநிலை’ என்ற அறிவிப்பு வெளியானதால், கடும் எதிர்ப்புகள் வலுத்தன. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மக்கள் பக்கம் நின்று, இந்த முடிவை எடுத்ததாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
Discussion about this post