Thamilaaram News

20 - March - 2023
Facebook Twitter Linkedin Instagram
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
Home covid

அதிஅபாய மாவட்டமும் அலட்சியமாக காணப்படும் பொது மக்களும் – மு.தமிழ்ச்செல்வன்

August 20, 2021
in covid, இலங்கை, முக்கியச் செய்திகள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 46 ஆயிரம் பொது மக்கள் உள்ளனர். இந்த சனத் தொகையில் நாளாந்தம் 100 க்கு மேல் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். அதிலும் பரிசோதனைக்கு செல்கின்றவர்களிலேயே இந்த எண்ணிக்கையான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். இதுவொரு ஆபத்தான நிலைமை. ஆனால் பொது மக்கள் இந்த ஆபத்தான நிலைமையினை உணர்ந்துகொண்டு செயற்படுகின்றவர்களாக இல்லை. எல்லாவற்றுக்கும் அரசையும், சுகாதார துறையையும் நோக்கி விரல்களை நீட்டிவிட்டு நாம் கடந்துசெல்ல முடியாது

வருமுன் காப்பதில் பொது மக்களின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது. நாம் எம்மையும் எமது உறவுகளையும் எம் சார் சமூகத்தையும் பெரும் தொற்றாபத்திலிருந்து பாதுகாக்க வேண்டுமாயின் பொறுடன் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடந்துகொள்ள வேண்டியது அனைவரதும் கட்டாய கடமையாகும். அதுவும் கிளிநொச்சி போன்ற தொற்று வேகமாக பரவும் மாவட்டத்தில் இது மிக மிக அவசியமானது.

கிளிநொச்சி மாவட்டத்தில் முதலாவது கோரோனா நோயாளி 07.11.2020 அடையாளம் காணப்பட்ட நாள் தொடக்கம் கடந்த மாதம் 31 திகதி வரை 1400 தொற்றாளர்கள். ஆனால் இந்த மாதம் ( ஓகஸ்ட்) முதல் 16 நாட்களில் மாத்திரம் 1246 தொற்றாளர்கள்.

நாட்டில் தீவிரமாகப் பரவிவரும் கொரனா தற்போது கிளிநொச்சி மாவட்டத்திலும் அதிதீவிரமாக பரவத் தொடங்கியுள்ளது. என்பதனையே இது காட்டுகின்றது.

கடந்த 04.08.2021 அன்று இலங்கை தொற்றுநோய் விஞ்ஞானப்பிரிவினரால் வெளியிடப்பட்ட தரவுகளில் கிளிநொச்சி மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலகர் பிரிவுகளும் கொரனா அதிஅபாய (சிவப்பு) வலயங்களாக இனங் காட்டப்பட்டுள்ள நிலையில் கடந்த சில தினங்களாக தினமும் பாரிய அளவில் கொரனா நோயாளர்கள் கிளிநொச்சியில் கண்டறியப்பட்டு வருகின்றனர்.

கிளிநொச்சி மாவட்ட சுகாதாரத்துறையினரின் அறிக்கைகளின்படி மாவட்டத்தில் இயங்கும் இடைத்தங்கல் வைத்தியசாலைகள் இரண்டும் தொற்றாளர்களால் நிரம்பிவிட்டன. மாகாண சுகாதாரப் பணிப்பாளரது தகவல்களின்படி மாகாணத்தில் உள்ள சகல இடைத்தங்கல் வைத்தியசாலைகள் மற்றும் விசேட கொரனா விடுதிகள் நோயாளர்களால் நிரம்பி வழிகின்றன.

இவ்வாறான ஒரு நிலையில் புதிதாக இனங்காணப்படுபவர்களில் ஒட்சிசன் தேவை உடையவர்கள் மற்றும் பிற நோய்த்தாக்கம் உள்ளவர்கள் உட்பட வைத்தியசாலை அனுமதி உடனடியாக தேவைப்படுபவர்களை அனுமதிப்பதில் ஏற்படக்கூடிய தாமதங்கள் அவர்களது உயிருக்கே உலை வைக்கலாம்.

மாவட்ட சுகாதார ஆளணியினர் இரவு பகல் பாராது கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக பணியாற்றுவதால் உள மற்றும் உடற்சோர்வுகளுக்கு ஆளாகியுள்ள இத்தருணத்தில் அவர்களது வேவைப்பளுக்களை அதிகரிப்பதால் பல்வேறு மனித வழுக்கள் நேரிடத் தொடங்கியுள்ளன.

அன்ரிஜன் சோதனையில் எதிர்மறையான முடிவு வந்துள்ளதாக வீட்டுக்கு அனுப்பப்பட்ட முதியவர் ஒருவர் தமது நோய் அறிகுறி முற்றியதும் வைத்தியசாலைக்கு செல்ல நோயாளர் காவு வண்டியை கோரியுள்ளார். அப்போதுதான் “உங்களுக்கு நோய்த்தொற்று உள்ளதாக அன்ரிஜன் முடிவு வந்தது. அதனை உங்களுக்கு அறிவிக்க மறந்துவிட்டடோம். மன்னித்துக்கொள்ளுங்கள்” எனக் சுகாதாரக் களப்பணியாளர்கள் பதிலளித்ததுடன் அவரை பாதுகாப்பாக வைத்தியசாலைக்கு அழைத்து வந்துள்ளனர். அத்தோடு அன்ரிஜன் பிரிசோதனையில் தொற்று என உறுதிப்படுத்தப்பட்ட பலர் தற்போது வீடுகளில் உள்ளனர். இவர்களை கண்கானிக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. தொற்றாளர்கள் அதிகரிக்க அதிகரிக்க சுகாதார துறையினரின் நெருக்கடியும் அதிகரித்து செல்கிறது. அத்தோடு ஏனைய நோயாளிகளின் மீதான கவனமும், சிகிச்சையும் குறைவடைந்து முழுக் கவனமும் கொரோனா பக்கம் திரும்புகிறது. கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக நீரிழிவு, இதய நோய், தைரொய்ட் போன்ற மாதாந்த கிளினிக் நோயாளிகளை மருத்துவர்கள் பரிசோதிக்காது மருந்துக்களை மீள மீள எழுதி அனுப்பி வருகின்றார்கள் என அவர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.

எனவே கிளிநொச்சி மாவட்டத்தின் சனத்தொகையில் மேற்படி நாளாந்த கொரோனா தொற்றாளர்களின் அதிகரிப்பு என்பது உண்மையில் மாவட்டம் ஒரு அனர்த்த நிலைமைக்குள் சென்றுக்கொண்டிருக்கிறது என்பதன் சமிஞ்சையே.

அதனால் அனாவசியமாக வீடுகளிலிருந்து வெளியே வராமல், அனாவசிய கூட்டங்கள், திருவிழாக்கள், களியாட்டங்கள் என்பவற்றில் ஈடுபடாமல் எம்மை நாமே வீடுகளில் சுயதனிமைப்படுத்திக்கொள்வதே தற்போதைய காலத்தின் தேவையாகும். அவசியம் கருதி வெளியே வரும் சந்தர்ப்பங்களில் உரியவகையில் முகக்கவசம் அணிந்து வருவதுடன், மற்றையவர்களுக்கு அருகில் செல்லாது இரண்டு மீற்றர்களாவது இடைவெளி பேணுவது மற்றும் அடிக்கடி சவர்க்காரம் கொண்டு கைகளை நன்கு கழுவுவது ஆகிய சுயபாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். இதுவே கொரனா எம்மிடம் தொற்றிக்கொள்வதையும் எம்மிடமிருந்து பிறருக்கு பரவுவதையும் தடுக்கும்.

கொரனா மனிதரில் இருந்தே மனிதருக்கு பரவுகிறது. எனவே நாம் ஒவ்வொருவரும் எமது சொந்தப் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவே நோய்த்தொற்றிலிருந்து அவர்களையும் அவர்களது அன்பிற்குரியவர்களையும் கொரானா ஆபத்திலிருந்து காப்பாற்றும்.

ஆகவே, நாம் எம்மையும் எமது அன்பிற்குரியவர்களையும் மரணத்திலிருந்து பாதுகாக்க வேண்டுமானால் கொரனா எமக்கு தொற்றுவதையும் எம்மிலிருந்து எமது அன்பிற்குரியவர்களுக்கு தொற்றுவதையும் தடுப்பதே தற்போதுள்ள ஒரே வழியாகும்.

Previous Post

இன்று கிளிநொச்சியில் அதி உச்ச எண்ணிக்கையில் கொ ரோனோ தொற்று .

Next Post

யாழ்ப்பாணம் – கிளிநொச்சி வழித்தடத்தில் இ.போ.ச பேருந்து ஒன்று, இன்று (21/08/2021) முதல் காலையும், மாலையும் சேவை.

Next Post

யாழ்ப்பாணம் - கிளிநொச்சி வழித்தடத்தில் இ.போ.ச பேருந்து ஒன்று, இன்று (21/08/2021) முதல் காலையும், மாலையும் சேவை.

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest
கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

March 6, 2022
துயர் பகிர்வு –  திரு. கந்தைய்யா  தவபாலசந்திரன்

துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்

November 17, 2022
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

March 1, 2022
வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

March 26, 2022

திடீரென பற்றிய தீயினால் தும்பு தொழிற்சாலை எரிந்து நாசம்

ஜேர்மனியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – விமல் வீரவங்ச

கொரோனாவுக்கு மேலும் 34 பேர் பலி

இராணுவ ஹெலிகொப்டர் தலைகீழாக விழுந்து விபத்து!

இராணுவ ஹெலிகொப்டர் தலைகீழாக விழுந்து விபத்து!

March 20, 2023
3 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

3 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

March 20, 2023
அரை சொகுசு பேருந்து சேவைகள் முற்றாக இரத்து !

அரை சொகுசு பேருந்து சேவைகள் முற்றாக இரத்து !

March 20, 2023
மத்திய வங்கி வெளியிட்டுள்ள மகிழ்ச்சித் தகவல்!

மத்திய வங்கி வெளியிட்டுள்ள மகிழ்ச்சித் தகவல்!

March 20, 2023

Recent News

இராணுவ ஹெலிகொப்டர் தலைகீழாக விழுந்து விபத்து!

இராணுவ ஹெலிகொப்டர் தலைகீழாக விழுந்து விபத்து!

March 20, 2023
3 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

3 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

March 20, 2023
அரை சொகுசு பேருந்து சேவைகள் முற்றாக இரத்து !

அரை சொகுசு பேருந்து சேவைகள் முற்றாக இரத்து !

March 20, 2023
மத்திய வங்கி வெளியிட்டுள்ள மகிழ்ச்சித் தகவல்!

மத்திய வங்கி வெளியிட்டுள்ள மகிழ்ச்சித் தகவல்!

March 20, 2023
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.