ரஷ்யாவின் பாதுகாப்பு மற்றும் ரஷ்யர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அணு ஆயுதங்களையும் நாம் பயன்படுத்துவோம் என்று ரஷ்ய ஜனாதிபதி மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோ தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா, உக்ரைன் மீது இன்று 28 நாளாகத் தாக்குதல்களை நடத்தி வருகின்றது. உக்ரேனின் பல நகரங்களை ரஷ்யப் படைகள் கைப்பற்றியுள்ளபோதும், தலைநகர் கீவ் மற்றும் துறைமுக நகரான மரியபோல், கார்கிவ் என்பன இன்னமும் உக்ரைனின் வசமே உள்ளன.
அந்த நகரங்களைக் கைப்பற்ற ரஷ்யப் படைகள் கடும் தாக்குதல்களை நடத்திவருகின்றபோதும், ரஷ்யப் படைகளின் முன்னேற்ற முயற்சி இன்னமும் பயனளிக்கவில்லை. இந்தநிலையில் இந்தப் போர் மூன்றாம் உலகப் போருக்கு வழி வகுக்கும் என்று உக்ரைன் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
இது தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே ரஷ்ய ஜனாதிபதி மாளிகையின் செய்தித் தொடர்பாளர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.
உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் நாட்டு மக்களின் பாதுகாப்பு என்பனவே எமக்கு முதன்மையானது. ரஷ்யா என்ற நாடு உலகத்தில் இருக்குமா? இல்லையா? என்ற உயர்ந்தபட்ச அச்சுறுத்தல் ஏற்படுமாயின் அணு ஆயுதங்களை நாங்கள் பயன்படுத்துவோம் என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
Discussion about this post