ரூபாவை பலப்படுத்தினால் தான் நாட்டை கட்டியெழுப்ப முடியும். யார் என்ன சொன்னாலும் இதற்கு மாற்று வழியில்லை. அந்த உண்மையை அறிந்து செயல்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.கொழும்பு களதாரி ஹோட்டலில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ரூபாவின் பெறுமதிதொடர்ந்தும் தெரிவிக்கையில்,ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததால் நமது செலவுகள் அதிகரித்தன. கொள்வனவு செய்யும் சக்தி குறைந்தது. ஒரு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் போது இந்த நிலை ஏற்படும். ஆனால் வரிகளை குறைப்பதாக இன்று சிலர் கூறுகின்றனர்.
வரிகளை குறைப்பதன் மூலம், கடந்த அரசாங்கம் நாட்டை எந்த இடத்திற்கு கொண்டு சென்றதோ அந்த நிலைக்கு நாங்கள் திரும்பிச் செல்ல நேரிடும். எனவே இது மாற்றுவழியல்ல.ரூபாவை வலுப்படுத்த நாங்கள் நடவடிக்கை எடுத்துவருகிறோம். ரூபாவை வலுப்படுத்த அரச வருமானத்தை அதிகரிக்க வேண்டும்.நான் ஆட்சிக்கு வந்த முதல் வருடத்திற்குப் பிறகு, அரசின் நிவாரணப் பணிகளைத் தொடங்கினோம். அதற்காக அஸ்வெசும திட்டம் செயல்படுத்தப்பட்டது. அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை உயர்த்தவும் பணியாற்றினோம்.உதய ஆர். செனவிரத்ன குழுவின் அறிக்கையின் பிரகாரம் அடுத்த ஆண்டு முதல் இதனை நடைமுறைப்படுத்துவோம்.
வரி மட்டங்களை மறுசீரமைப்பது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். ரூபாவை பலப்படுத்தினால் தான் நாட்டை கட்டியெழுப்ப முடியும்.யார் என்ன சொன்னாலும் இதற்கு மாற்று வழியில்லை. அந்த உண்மையை அறிந்து செயல்பட வேண்டும். எனவே, இந்த திட்டங்களை நாம் தொடர வேண்டும். செப்டம்பர் 22 முதல் அவற்றை நடைமுறைப்படுத்தலாம். வேறு எந்த கட்சிக்கும் இதுபோன்ற திட்டம் கிடையாது என குறிப்பிட்டுள்ளார்
Discussion about this post