இலங்கை கிரிக்கெட் சபையின் உறுப்பினர்களை நியமனம் செய்வது அமைச்சரவை அறிக்கையின் பிரகாரம் மேற்கொள்ளப்பட வேண்டுமென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அத்துடன், இலங்கை கிரிக்கெட் சபையில் மாற்றங்கள் செய்யாவிட்டால் கிரிக்கெட் மேலும் அதல பாதாளத்திற்கு செல்லும் என தெரிவித்த அமைச்சர், குழுவின் தலைவர்களை மாத்திரம் மாற்றி வெற்றியடைய முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
வெற்றியை நோக்கிய பயணம்
அதன்படி, ஒட்டுமொத்த அமைப்பையும் மாற்றி வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், 2024 ரி20 உலக கோப்பை தொடரில் வெளியெறி இன்றையதினம் இலங்கை கிரிக்கெட் அணி நாட்டை வந்தடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post