இறக்குமதித் தடை விதிக்கப்பட்டிருந்த 369 வகையான அத்தியாவசியமற்ற பொருள்களுக்கான இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் வரிகள் உட்பட பொருந்தக்கூடிய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்பிள்,யோக்கட், பட்டர், பேரீச்சம்பழம், சீஸ் உட்படப் பல பொருள்களுக்கு விதிக்கப்பட்டிருந்த இறக்குமதித் தடையே நீக்கப்பட்டுள்ளது.
செல்லுப்படியாகும் உரிமம் இல்லாவிடின், அத்தியாவசியமற்ற 369 பொருள்களை இலங்கைக்குள் இறக்குமதி செய்வதை மட்டுப்படுத்தி கடந்த மார்ச் மாதம் 9 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டிருந்தது.
இந்தநிலையில் அவற்றை செல்லுப்படியாகும் உரிமம் இன்றி இறக்குமதி செய்ய அனுமதி வழங்கி நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.
அதேவேளை, 8 வீதமாக இருந்த பெறுமதி சேர் வரி (வற் வரி) நேற்றுமுதல் 12 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனால் பொருள்களின் விலைகள் உயர்வடையும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
Discussion about this post