16 வயதிற்கும் குறைந்த சிறுவர்களை பணிக்கமர்த்துவது தொடர்பில் விசேட
விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் ஆலோசனை
வழங்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், ஓய்வு பெற்ற ரியல்
அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
16 வயதிற்கும் குறைந்த சிறுவர்களை பணிக்கமர்த்துவது குற்றமாகும்.
இவ்வாறான சிறுவர்கள் இருப்பின், அது குறித்து ஆராய்ந்து
பணிக்கமர்த்தியவர்களை கைது செய்து வழக்கு தொடர்வது தொடர்பில் அனைத்து
பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்துள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர
தெரிவித்துள்ளார்.
இது குறித்து பொதுமக்களும் விழிப்புடன் செயற்பட வேண்டும் என அவர்
அறிவுறுத்தியுள்ளார்.
Discussion about this post