கொழும்பில் இருந்து சென்று சென்னையில் தரையிறங்கிய இண்டிகோ விமானத்தின் விமானி மீது லேசர் லைட் அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொழும்பில் இருந்து 153 பயணிகளுடன் சென்ற சென்னையில் நேற்று அதிகாலை இண்டிகோ விமானம் தரையிறங்கியது.
விமானம் தரையிறங்கிய நேரத்தில் நடந்த இந்த சம்பவம் ஒன்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விமானம் வேகமாக தரையிறங்கிய நேரம் பார்த்து விமானி இருக்கும் காக் பிட்டை நோக்கி லேசர் ஒளி பாய்ச்சப்பட்டு இருக்கிறது.
சரியாக விமானி இருக்கும் பகுதியை நோக்கி அவரின் கண்களில் அடிக்கும் விதமாக இந்த ஒளி பாய்ச்சப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த லேசர் ஒளி அதிக ஆற்றலுடன் இருந்ததாக கூறப்படுகிறது. இரண்டு விமானிகளையும் நோக்கி இந்த ஒளி அடிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் விமானிகள் இந்த ஒளி பெரிதாக பாதிக்கவில்லை. அவர்கள் இந்த ஒளி காரணமாக லேசாக கவனம் சிதறியதாக கூறப்படுகிறது.
ஆனால் இதனால் பெரிதாக பாதிப்பு ஏற்படவில்லை. விமானிகள் எந்த பிரச்சனையும் இல்லாமல் கவனமாக விமானத்தை தரையிறக்கி உள்ளனர்.
விமானம் இதனால் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. இந்த நிலையில் உடனடியாக பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
விமான நிலைய அதிகாரிகள் மூலம் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உடனே விசாரணை நடத்தப்பட்டது. அதன்படி பழவந்தாங்கல் ஏரியாவில் இருந்து இந்த லேசர் ஒளி வந்து இருக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து 2 கிலோ மீற்றர் தொலைவில் இருந்து இந்த ஒளி வந்துள்ளது.
இண்டிகோ விமான நிலைய அதிகாரிகள் மூலம் விமான நிலைய பொலிஸ் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் 5 வருடங்களுக்கு முன் இதேபோல் சம்பவம் நடைபெற்றது.
அப்போது இரண்டு பேர் இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்திலும் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post