Saturday, May 24, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home மருத்துவம்

14 நாட்களில் தொப்பையைக் குறைக்க வேண்டுமா? இதை செய்தால் போதும்

July 6, 2023
in மருத்துவம், முக்கியச் செய்திகள்
14 நாட்களில் தொப்பையைக் குறைக்க வேண்டுமா? இதை செய்தால் போதும்
0
SHARES
Share on FacebookShare on Twitter

வயிற்றுத் தொப்பையை குறைக்க 14 நாள்கள் இந்த வழிமுறைகளை பின்பற்றுங்கள் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். இதோ இதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் குறித்து அவர்கள் தெரிவித்த கருத்துக்களை இங்கே விரிவாகத்தெரிந்துக் கொள்வோம்.

கீரைகள்:

தொப்பையைக் குறைக்க வேண்டும் என்ற முயற்சியில் இருப்பவர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான உணவை உங்களுடைய உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் முக்கியமானது ஒன்று கீரைகள். இது உங்களின் செரிமான நொதிகளின் ஓட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் செரிமானத்தை சீராக்குகிறது. இதில் உள்ள ப்ரீபயாடிக் நார்ச்சத்து நுண்ணுயிரிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதோடு வீக்கம், வாயு மற்றும் விரிந்த வயிற்றைக் குறைக்கும் என்று நியூட்ரிஷன் ட்வின்ஸ் கூறுகிறார்.

இனிப்பான பழங்கள்:

விரைவில் உங்களது தொப்பையைக் குறைக்க வேண்டும் என்று நினைத்தால் இனிப்பு பண்டங்கள் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். இதனால் உங்களின் உடல் எடை கணிசமாக குறையும். ஒருவேளை உங்களுக்கு இனிப்பு பொருள்கள் எதுவும் சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் இனிப்புள்ள பழங்களை உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளவும். இவ்வாறு குறைந்த அளவிலான இனிப்புக்கு நீங்கள் மாறத் தொடங்கும் போது உங்களின் உடல் எடை குறைகிறது.

வயிற்றுக்கான உடற்பயிற்சி:நியூட்ரிஷன் ட்வின்ஸ் தெரிவிக்கும் கருத்தின் படி, வயிற்றுப் பகுதி சுருங்க வேண்டும் என்றால், நீங்கள் வயிற்றுக்கான உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். வயிற்றை இழுத்து மூச்சை வெளியேற்றும் பயிற்சியை 10 வினாடிகள் மேற்கொள்ள வேண்டும்.

பின்னர், படிப்படியாக பிடியை விடுவித்து, ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்று முறை அல்லது 10 முறை இந்த உடற்பயிற்சியை மீண்டும் செய்ய வேண்டும். இது உங்களின் வயிற்றுப் பகுதியைக் குறைப்பதற்கு உதவியாக உள்ளது.

வயிற்றுக்கான உடற்பயிற்சி:

நியூட்ரிஷன் ட்வின்ஸ் தெரிவிக்கும் கருத்தின் படி, வயிற்றுப் பகுதி சுருங்க வேண்டும் என்றால், நீங்கள் வயிற்றுக்கான உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். வயிற்றை இழுத்து மூச்சை வெளியேற்றும் பயிற்சியை 10 வினாடிகள் மேற்கொள்ள வேண்டும். பின்னர், படிப்படியாக பிடியை விடுவித்து, ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்று முறை அல்லது 10 முறை இந்த உடற்பயிற்சியை மீண்டும் செய்ய வேண்டும். இது உங்களின் வயிற்றுப் பகுதியைக் குறைப்பதற்கு உதவியாக உள்ளது.

சிவப்பு நிற காய்கறிகள் மற்றும் பழங்கள் :

நீங்கள் தொப்பை கொழுப்பைக் குறைக்க விரும்பினால், உங்கள் உணவில் அதிக சிவப்பு நிற பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சேர்க்க வேண்டும். இதில் ஃபிளாவனாய்டுகள் நிறைந்திருப்பதால், எடை இழப்பு மற்றும் உடல் பருமனைத் தடுப்பதற்கு உதவுகிறது.

அதிக கொழுப்புகளைத் தவிர்த்தல்: வெண்ணெய் பழங்கள், நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகளவில் சாப்பிடுவது உடல் எடைக்குறைப்பிற்கு உதவியாக இருக்கும்.

புரதம் உட்கொள்ளுதல்:

கடல் உணவுகள் மற்றும் காலர்ட் கீரைகள் ஆகியவற்றில் புரதங்கள் நிறைந்துள்ளது. இந்த ஆரோக்கியமான கொழுப்புகளால் உங்களது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. மேலும், புரதம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் பசியைக் குறைக்கவும் உதவும்.

பதப்படுத்தப்பட்ட உணவைத் தவிர்த்தல்:

அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. இவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது செரிமானம் அதிகளவில் ஏற்படாது. எனவே இந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

அதிகளவு தண்ணீர் பருகுதல்:

உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இது உங்களின் ஒட்டுமொத்த உடல் நலத்தைப் பாதுகாப்பதோடு சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் செயல்பாட்டை சீராக்குகிறது.

நார்ச்சத்துள்ள காய்கறிகளை உட்கொள்தல்: முட்டை, மீன், கோழி, நட்ஸ் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளும் புரோட்டீன்கள் அதிகளவில் கிடைக்கும் மற்றும் உடல் எடையும் குறையக்கூடும்.

தினமும் உடற்பயிற்சி செய்தல்: உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு உடற்பயிற்சியும், நடைப்பயிற்சியும் அவசியம். ஆரோக்கியமான பெரியவர்கள் குறைந்தபட்சம் 150 நிமிட மிதமான தீவிர ஏரோபிக் உடற்பயிற்சி அல்லது 75 நிமிட தீவிர தீவிர ஏரோபிக் உடற்பயிற்சியை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். இயற்கையுடன் நீங்கள் வாக்கிங் செல்லும் போது மன அமைதியும் உங்களுக்கு ஏற்படுகிறது.

வெயிட் லிப்டிங்: நீங்கள் மெலிந்து உங்கள் வயிற்றை சமன் செய்ய விரும்பினால். வெயிட் லிப்டிங் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

Tags: #tamilnews#Thamilaaram#ThamilaaramNews#Tips#WeightLoss
Previous Post

லியோ பாடலுக்கு செம ஆட்டம் போட்ட தொகுப்பாளினி அர்ச்சனா மகள் சாரா

Next Post

5 நாட்களில் மாமன்னன் திரைப்படத்தின் வசூல் இவ்வளவா?

Next Post
5 நாட்களில் மாமன்னன் திரைப்படத்தின் வசூல் இவ்வளவா?

5 நாட்களில் மாமன்னன் திரைப்படத்தின் வசூல் இவ்வளவா?

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.