கொழும்பு – கொட்டாஞ்சேனை மற்றும் அதை அண்மித்த பகுதிகளில் 11 இளைஞர்களை கப்பம் பெறுவதற்காக கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
விசேட மூவர் அடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது நேற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த வழக்கில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கருநாகொட உள்ளிட்ட 14 கடற்படை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
Discussion about this post