இலங்கையில் கடவுச்சீட்டுக்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், கடவுச்சீட்டுகள் தயாரிக்கும் செயல்முறையை ஆராய்வதற்காக குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் குழு ஒன்று போலந்து சென்றுள்ளது.
இ-பாஸ்போர்ட் டெண்டரால், குடிவரவுத் துறைக்கு நெருக்கடி ஏற்பட்டு, திணைக்களம் அருகே மக்கள் நீண்ட வரிசைளில் காத்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
ஆன்லைன் பதிவு நிறுத்தம்
இந்நிலையில் ஆன்லைன் மூலம் திகதி பதிவு செய்யும் பணியும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும், புதிய கடவுச்சீட்டுகளின் கையிருப்பு ஒக்டோபர் 25ஆம் திகதி இலங்கைக்கு பெற்றுக்கொள்ளப்படும் என திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி அன்றைய தினம் இலங்கையில் 50,000 வெற்று கடவுச்சீட்டுகள் பெறப்பட உள்ளன. அதன் பிறகு, சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகு, நாடு மேலும் 100,000 வெற்று கடவுச்சீட்டுகளைப் பெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், 05 வருட காலத்திற்குள் நாடு 50 இலட்சம் வெற்று கடவுச்சீட்டுகளை கையிருப்பில் வைத்திருக்கப் போகிறது.
அதேவேளை புதிய வெற்று கடவுச்சீட்டில் முன் பக்கம் கறுப்பு நிறத்தில் போலந்தில் தயாரிக்கப்படுவதாகவும் குடிவரவுக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்திருந்தார்.
இதன்படி, இந்த வெளிநாட்டு கடவுச்சீட்டுகளின் உற்பத்தி செயல்முறையை ஆராய்வதற்காக குடிவரவு திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழு போலந்தில் உள்ள சம்பந்தப்பட்ட தொழிற்சாலைக்கு சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Discussion about this post