வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தொழிற்பேட்டைகள், வர்த்தக மற்றும் உற்பத்தி நிறுவனங்களை ஆரம்பிக்க மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ரோஹன திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த முயற்சிகளில் ஈடுபட விரும்புபவர்களுக்கு தேவையான வசதிகள் மாகாண சபை, பிரதேச சபை மூலம் செய்து கொடுக்கப்படும்.
நாடு இன்று எதிர்நோக்கியுள்ள டொலர் பிரச்சினைக்கு தீர்வாக வெளிநாட்டில் பணியாற்றுபவர்கள் டொலரை இலங்கைக்கு அனுப்புவதை ஊக்குவிக்கும் வகையில் அரச அதிகாரிகள் செயற்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post