மானிப்பாயில் வீடுடைத்து இலத்திரனியல் உபகரணங்களைத் திருடிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்டப் பொலிஸ் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்தவாரம் மானிப்பாய் முத்துத்தம்பி வீதியில் புதிததாகக் கட்டப்பட்ட வீடொன்றை உடைத்து அங்கிருந்த சலவை இயந்திரம், வளிச் சீராக்கி (ஏசி), பாதுகாப்புக் கமரா உட்பட 6 லட்சத்து 18 ஆயிரம் ரூபா பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்கள் திருடப்பட்டன. இந்தச் சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பாக யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் மானிப்பாய் பொலிஸ் நிலைய உத்தியோகத்தரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மானிப்பாயைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டார். சந்தேக நபரால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் திருடப்பட்ட மின் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
Discussion about this post