வவுனியாவில் இருந்து நுவரெலியாவுக்குச் சென்ற மூவர் இறம்பொடை நீழ்வீழ்ச்சியில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வவுனியாவில் இருந்து சென்ற சிலர் நேற்றுப் பிற்பகல் நீர்வீழ்ச்சியை அண்மித்த ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். திடீரெ நீரின் வேகம் அதிகரித்த நிலையில், அவர்களில் 7 பேர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அவர்களில் 4 பேர் அங்கிருந்தவர்களால் காப்பாற்றப்பட்ட நிலையில், மூவர் காணாமல் போயுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். காணாமல் போன மூவரையும் தேடும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
Discussion about this post