வவுனியா, வைரவப்புளியங்குளத்தில் மூழ்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று மாலை நடந்துள்ளது.
கூமாங்குளத்தைச் சேர்ந்த ஆ.தங்கவேல் என்பவரே உயிரிழந்துள்ளார்.
குளப்பகுதியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த முதியவர், திடீரென நிலைதடுமாறி குளத்துக்குள் வீழ்ந்துள்ளார் என்று கூறப்படுகின்றது.
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு வவுனியா மருத்துவமனையில் சேர்ப்பித்தபோதும், சிகிச்சை பயனின்றி அவர் உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Discussion about this post