யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் அடுத்துவரும் 36 மணி நேரத்துக்குப் பலத்த மழை வீழ்ச்சி ஏற்படும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடாவில் தோற்றம் பெற்ற வளிமண்டல மேலடுக்கு சுழற்சி முல்லைத்தீவுக்கு கிழக்கே 300 கிலோ மீற்றர் தொலைவில் வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ளது.
இதனால் வடக்கு மாகாணம் முழுவதும் பலத்த மழை வீழ்ச்சி ஏற்படும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மழை பெய்யும் சந்தர்ப்பத்தில் பலத்த மின்னல் தாக்கங்களும் ஏற்படலாம் என்பதால், மக்கள் அவதானமாகச் செயற்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post