வங்காள விரிகுடாவில் விருந்த்தியடைந்துள்ள தாழமுக்கத்தால் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் இடையிடையே மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்த்து.
தென்மேற்கு வங்காள விரிவுகுடாவில் விருத்தியடைந்த தாழமுக்கம் திருகோணமலை கரையில் இருந்து 190 கிலோமீற்றர் தூரத்தில் நிலைகொண்டுள்ளது.
அடுத்துவரும் சிலமணி நேரங்களில் ஆழமான தாழமுக்கமாக இது விரிவடைந்து வடமேற்குத் திசையில் இலங்கையின் கிழக்குக் கரையை அண்மித்ததாக வட தமிழ்நாட்டுக் கரையை நோக்கி நகரக்கூடும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்திலும், திருகோணமலை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது இடையிடையே மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வரை அதிரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post