யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் திருடப்பட்ட முச்சக்கர வண்டி ஒன்று நேற்று பருத்தித்துறையில் மீட்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை பொலிஸ் விசேட அணி மேற்கொண்ட நடவடிக்கையிலேயே முச்சக்கர வண்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பின்புறம் உள்ள வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி திருடப்பட்டிருந்தது. இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் திருடப்பட்ட முச்சக்கர வண்டி பருத்தித்துறை பொலிஸ் விசேட அணி மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் துன்னாலையைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் விசாரணைகளின் பின்னர் அவர் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்றும் பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
Discussion about this post