யாழ்ப்பாணம், ஸ்ரான்லி வீதியில் உள்ள பிளாஸ்ரிக் பொருள்கள் விற்பனையகம் ஒன்று இன்று அதிகாலை முற்றாகத் தீக்கிரையாகியுள்ளது.
அதிகாலைவேளை திடீரென தீ பரவிய நிலையில், தீயை அணைக்க அயலில் உள்ளவர்கள் எடுத்த முயற்சி பயனளிக்கவில்லை. அதையடுத்து யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவுக்குத் தகவல் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புப் பிரிவினர் பலத்த முயற்சியின் பின்னர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தீப் பரவலுக்கான காரணம் கண்டறியப்படவில்லை.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Discussion about this post