அரியாலை, நாவலடியில் இன்று மதியம் ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். அதே இடத்தைச் சேர்ந்த ம.அரவிந்தன் என்ற 28 வயது இளைஞனே உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் ரயில் கடவையைக் கடந்தபோது ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
விபத்தை அடுத்து அந்தப் பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது. பாதுகாப்பற்ற ரயில் கடவையில் பல விபத்துக்கள் நடந்துள்ளன என்று தெரிவித்த பிரதேச மக்கள், பாதுகாப்பான ரயில் கடவை அமைக்கப் பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்டபோதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டினர்.
சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், பாதுகாப்பான ரயில் கடவை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.
Discussion about this post