யாழில் பண்டத்தரிப்பு சித்தங்கேணி வீதியிலுள்ள வீடொன்றிற்குள் பெண் ஒருவர் புகுந்து தாலிக்கொடியை திருடிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக் குற்றச்சாற்றில் கைது அப் செய்யப்பட்ட மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அவரை நீதிமன்றம் எச்சரித்து பிணையில் செல்ல அனுமதித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் 31 ஆம் திகதி நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப் பெண் சித்தங்கேணியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்த நிலையில் வீட்டு மேசையில் வைக்கப்பட்டிருந்த தாலிக்கொடி காணாமல் போனது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
விசாரணையை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் பெண் ஒருவரை கைது செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தாலிக்கொடி தனியார் அடகு நிறுவனம் ஒன்றில் இரண்டு இலட்சம் ரூபாவுக்கு அடகுவைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
பொலிசார் நீதிமன்ற அனுமதி பெற்று அந்த நகையை மீட்டதுடன் பெண்ணையும் கைது செய்து நீதி மன்றில் முற்படுத்தியதாக தெரிய வந்துள்ளது. சந்தேக நபருக்கு குழந்தை இருப்பதால் கடும் எச்சரிக்கையுடன் நீதிமன்றம் பிணை வழங்கியது.
Discussion about this post