யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவனில் நேற்று இரவு வீதியால் பயணித்துக் கொண்டிவரை வாள்முனையில் அச்சுறுத்தி கைத்தொலைபேசி மற்றும் 15 ஆயிரம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
வெதுப்பக உற்பத்தி வியாபாரத்தில் 29 வயதான இளைஞரே பெறுமதியான கைத்தொலைபேசியையும், பணத்தையும் இழந்துள்ளார். புன்னாலைக் கட்டுவன் சந்திக்கு அருகில் வாள்களுடன் பற்றைக்குள் மறைந்திருந்த மூவரே கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
Discussion about this post