மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவையை ஆகஸ்ட் மாதம் முதலாம்
திகதி முதல் ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு
தெரிவித்துள்ளது.
நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டார்.
ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில்
மாகாணங்களுக்கு இடையில் பொது போக்குவரத்து சேவைகளை ஆரம்பிக்க COVID
ஒழிப்பு குழு அனுமதி வழங்கியுள்ளதாக திலும் அமுனுகம தெரிவித்தார்.
இதனடிப்படையில், ஆகஸ்ட் முதலாம் திகதிக்கு பின்னரும் பயணக்கட்டுப்பாடு
நீடிக்குமாயின், மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பஸ்களும் ரயில் சேவைகளும்
முன்னெடுக்கப்படும் எனவும் பயணக்கட்டுப்பாடு நீக்கப்படுமாயின், வழமை
போன்று போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர்
குறிப்பிட்டார்.
Discussion about this post