கடந்த 9ஆம் திகதி காலிமுகத் திடலிலும், அலரி மாளிகை அருகிலும் நடந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் வாக்குமூலம் பெறுவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
முன்னாள் அமைச்சர்களான நாமல் ராஜபக்ச, ரோஹித அபேகுணவர்த்தன, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ மற்றும் அமைச்சர் ரமேஷ் பத்திரண ஆகியோரிடமும் வாக்குமூலம் பெறப்படவுள்ளது.
எதிர்வரும் புதன்கிழமை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாக வேண்டும் என்று அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி இன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
Discussion about this post