அரசுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த போராட்டக்காரர்களைத் தாக்கிய குற்றச்சாட்டில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிரிபத்கொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாகொல சந்தியில் களனி பல்கலைக்கழக மாணவர்களால், காலிமுகத்திடல் போராட்டத்தை ஆதரித்து பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை அங்கு சென்ற, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் நிலந்த பெரேரா தலைமையிலான குழுவினர் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பிரதேச சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Discussion about this post