எரிபொருள் விநியோகத்தில் தனியார் பேருந்து சேவைக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ள அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேவர்தன, டீசல் விநியோகம் சீராகும் வரையில் தனியார் பஸ் சேவைகள் மட்டுப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
டீசல் விநியோகத்தில் அரச பஸ் சேவைக்கு முன்னுரிமை வழங்குவதை போன்று தனியார் பஸ்களுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று பல தடவைகள் கோரியபோதும், சாதகமான பதில் கிடைக்கவில்லை என்று தெரிவித்த அவர், கல்வி பொதுதராதர சாதரண பரீட்சையினை கருத்திற்கொண்டு இதுவரை சேவையில் ஈடுப்பட்டோம் என்றும் தெரிவித்தார்.
டீசல் விநியோகம் சீராகும் வரையில், நாளை முதல் தனியார் பேருந்துபோக்குவரத்து சேவை மட்டுப்படுத்தப்படும் என்று கூறிய அவர், எரிபொருள் விலையேற்றத்துக்கு அமைய பஸ் கட்டணம் திருத்தம் செய்யப்பட்டுள்ள போதும் அது தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அது ஒரு தீர்வாக அமையாது, வாகனங்களின் உதிரிபாகங்களின் விலையேற்றத்துக்கமைய பஸ் கட்டணம் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று பஸ் உரிமையாளர்கள் வலியுறுத்துகின்றனர் என்றும் தெரிவித்தார்.
Discussion about this post