நாடாளுமன்றத்தில் இணக்கப்பாடு இருந்தால், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி தயாராகவே இருக்கின்றார். எதிரணியினர் சாதாரண பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியைப் பொறுப்பேற்கலாம் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நாலக கொடஹேவா தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. அதில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சர்வகட்சி இடைக்கால அரசை ஏற்படுத்துவதற்கு தான் தயார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மகாநாயக்க தேரர்களுக்கு எழுதிய கடிதத்திலும் அவர் அந்த விடயத்தை எடுத்துரைத்திருந்தார்.
ஆட்சி மாற்றத்துக்கு அவர் தடையாக இருக்கவில்லை. அரச தலைவராக நம்பகத்தன்மையுடன் செயற்பட்டுவருகின்றார்.
நாடாளுமன்றத்தில் இணக்கப்பாடு இருந்தால், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம். இது பற்றி ஜனாதிபதி எனக்கும் தனிப்பட்ட ரீதியில் தெரியப்படுத்தியுள்ளார்.
பிரச்சினைக்கு அரசமைப்பு ரீதியில்தான் தீர்வு காணவேண்டும். இடைக்கால சர்வகட்சி அரசுக்கு ஜனாதிபதி ஏற்கனவே அழைப்பு விடுத்தார். எதிர்க்கட்சிகள் முன்வரவில்லை.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்தால், ஆட்சி மாற்றத்துக்கு ஜனாதிபதி எதிராக இருக்கமாட்டார் என்றார்.
Discussion about this post