லண்டனில் இருந்து இலங்கைக்குச் சென்ற ஒருவருக்கு, வங்கி ஒன்று புழக்கத்தில் இல்லாத ஆயிரம் ரூபா நாணயத்தாள்களை வழங்கியுள்ளது.
வங்கி ஒன்றில் 5 ஆயிரம் ரூபாவைக் கொடுத்து மாற்றியபோது, தற்போது புழக்கத்தில் இல்லாத மஹிந்த ராஜபக்ச உருவம் பதித்த ஆயிரம் ரூபா நாணயத்தாள்கள் வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
அந்தப் பணத்தை பஸ் பயணத்தின்போது நடத்துநரிடம் கொடுத்தபோது, அந்த நாணயத்தை வாங்க பஸ் நடத்துநர் மறுத்துள்ளார் என்றும் கூறப்படுகின்றது.
இந்த நாணயத்தாள்கள் புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், வங்கி அந்த நாணயத்தாள்களை வழங்கியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post