புதிய பிரதமரான ரணிலின் செயலாளராக இலங்கை நிர்வாக சேவையின் ஓய்வுபெற்ற விசேட நிர்வாக அதிகாரி சமன் ஏக்கநாயக்க கோத்தபாய ராஜபக்சவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டுவரையான நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் மூன்று தடவைகள் பிரதமரின் செயலாளராக நியமிக்கப்பட்ட ஏக்கநாயக்க, தற்போது நான்காவது முறையாக பிரதமரின் செயலாளராக நியமிக்கப்படவுள்ளார்.
ஏக்கநாயக்க பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டத்தையும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.
Discussion about this post