கைபேசியில் “பப்ஜி” விளையாட்டில் தொடர்ச்சியாக மூழ்கியிருந்த குடும்பத்தலைவர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாவடியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். இவர் ஒரு பிள்ளையின் தந்தையாவார்.
யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்குள் கைபேசி இணைய விளையாட்டில் மூழ்கியிருந்து தவறான முடிவெடுத்து உயிரிழந்த இரண்டாவது நபர் இவராவார்.
எப்போதும் பப்ஜி விளையாடுவதில் ஆர்வமாக இருப்பார் என்றும், அவருக்கு வேறு பிரச்சினைகள் எவையும் இருக்கவில்லை என்றும் உயிரிழந்தவரின் மனைவி தெரித்துள்ளார்.
நேற்றிரவு குடும்பத்தினருடன் படம் பார்த்து விட்டு, உறக்கத்துக்குச் சென்றிருந்த நிலையில், இன்று காலை தூக்கிட்ட நிலையில் அவர் சடலமாகக் காணப்பட்டார்.
இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.
கைபேசி விளையாட்டில் மூழ்கியிருந்து, அதற்கு அடிமையாவோர் மனக் குழப்பத்துக்குள்ளாகி உயிரிழந்த சம்பவங்கள் யாழ்ப்பாணத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
Discussion about this post