இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகளை வழங்க அமைச்சரவைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி இரு அடிப்படை உரிமை மனுக்களை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
இலங்கை மக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் மற்றும் சேவைகளை எவ்வித தட்டுப்பாடும் இன்றி, நியாயமான விலையில் வழங்கத் தவறியமை, இலங்கையின் அரசமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும் என அந்த மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவில் சட்டமா அதிபர், அமைச்சரவை, மத்திய வங்கியின் ஆளுநர், திறைசேரியின் செயலாளர், பல அமைச்சுக்களின் செயலாளர்கள், இலங்கை மின்சார சபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் அரச மருந்துக் கூட்டுத்தாபனம் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
Discussion about this post