பணம் சம்பாதிப்பதற்காக ஒன்லைனில் தனது நிர்வாண வீடியோக்களை பகிர்ந்து கொண்ட குற்றச்சாட்டின் பேரில் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப்பிரிவின் அதிகாரிகளால் குறித்த பெண் கைது செய்யப்பட்டு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது நிமிடத்திற்கு 1000 ரூபா என்ற ரீதியில் தனது வங்கிக் கணக்கில் பணத்தை வைப்பு செய்த நபர்களுடன் தனது நிர்வாண வீடியோக்களை குறித்த பெண் பகிர்ந்துள்ளார் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அதேசமயம் பெண்ணின் கணவர் இந்தச் செயலை ஊக்குவிப்பதாகக் காணப்படுவதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
உண்மைகளை முன்வைத்த கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ், சந்தேகநபருக்கு எதிராக குற்றப்பத்திரிகையை அடுத்த விசாரணை தினத்தில் தாக்கல் செய்யுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டார்.
மேலும் சந்தேக நபரான பெண்ணை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.
Discussion about this post