நாட்டை விற்பதற்கோ அல்லது அண்டை நாடான இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படும்
வகையிலும் தான் ஒருபோதும் செயற்பட மாட்டேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பல்வேறு
கலந்துரையாடல்களில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து
தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது, சீன நிறுவனத்திற்கு பூனகரி கெளதாரி முனையில் அட்டை பண்ணைக்கு
அனுமதி வழங்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “சீன
நிறுவனத்தின் முதலீடுகளையும் தொழில்நுட்பத்தினையும் பெற்று எமது
மக்களுக்குப் பயன்படக்கூடிய வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது
மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தவோ அல்லது நாட்டை விற்கவோ அல்லது அண்டை
நாடான இந்தியாவிற்கு பாதிப்பை ஏற்படுத்தவோ நான் ஒருபோதும்
இடமளிக்கப்போவதில்லை.
Discussion about this post