எதிரணியினரால் கொண்டு வரப்பட்டுள்ள எரிசக்தி அமைச்சருக்கு எதிரான
நம்பிக்கையில்லாப் பிரேரணையை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன்
தோற்கடிப்போம் என அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற விவாதத்தில்
உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “நல்லாட்சிக் காலத்தில் 11
நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் கொண்டுவரப்பட்டன.
முதலாவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிராக
நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று கொண்டுவரப்பட்டது. அது என்ன நடந்தது
என்று யாருக்கும் தெரியாது?
இதுபோன்று கடந்த காலத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப்
பிரேரணைகளுக்கு என்ன நடந்தது என்றே தெரியாது.
நாம் நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் குறித்து அச்சப்படாத
காரணத்தினால்தான், விவாதத்திற்கு இதனை எடுத்துள்ளோம்.
இதனைக் கொண்டுவந்துள்ள எதிர்த்தரப்பினர் தேவலோகத்தில் இருந்து இறங்கி
வந்தவர்கள் போன்றுதான் செயற்படுகிறார்கள்.
எரிப்பொருள் வாங்க, மக்களை நீண்ட வரிசையில் கடந்த காலத்தில் நிற்க வைத்த
இந்தத் தரப்பினர் தான் இன்று எரிப்பொருள் விலையெற்றம் குறித்து
பேசுகிறார்கள்.
இந்த நிலையில் எரிசக்தி அமைச்சருக்கு எதிராக இவர்களால்
கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாம் வெற்றிகரமாகத்
தோற்கடிப்போம்.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post