இடைக்கால அனைத்து கட்சி அரசாங்கம் தொடர்பான வேலைத்திட்டத்துடன் ஏற்படுத்தப்படவுள்ள “தேசிய பேரவையில்” இணைந்துக்கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அரசாங்கத்தின் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக தேசிய இணக்கப்பாட்டு அரசாங்கத்தை உருவாக்கும் தேவை மற்றும் அதன் அடிப்படை நடவடிக்கையாக நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சித் தலைவர்களை கொண்ட தேசிய பேரவையை நியமிப்பது தொடர்பான முடிவை ஜனாதிபதி எடுத்துள்ளார்.
அதேவேளை சில வாரங்களுக்கு முன்னர், அரசாங்கத்தின் முக்கிஸ்தர்கள், பிரதமர் பதவியை ஏற்க வேண்டும் என்று ரணில் விக்ரமசிங்கவிடம் கோரினர் என்று கூறப்படுகிறது.
இதற்குப் பதிலளித்துள்ள ரணில் விக்ரமசிங்க, பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு மக்கள் கூறினால், நெருக்கடியான சந்தர்ப்பத்தில் கூட அதைப் பொறுப்பேற்க தயார் என கூறியுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
அதேவேளை சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதிக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் புதல்வரும் பிரதமரின் ஊழியர் குழுவின் தலைமை அதிகாரியுமான யோஷித்த ராஜபக்சவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று நடந்துள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன.
இராணுவ வெற்றிக்கு முன்னர் ஒரு அடி பின்நோக்கி நகர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகும் விதத்தில் ராஜபக்சவினரின் அரசியலை முன்நோக்கி கொண்டு செல்ல வேண்டுமாயின் இந்த சந்தர்ப்பத்தில் பிரதமர் தனது பதவியை துறக்க வேணடும் எனவும் அதற்கு உதவ வேண்டும் என்று ஜனாதிபதி கோரியுள்ளார் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.
Discussion about this post