திடீர் காய்ச்சல் காரணமாக 11 மாதக் குழந்தை உயிரிழந்துள்ளது. கொடிகாமம் தவசிக்குளத்தைச் சேர்ந்த சாந்தகுமார் விஸ்வந் என்ற ஆண் குழந்தையே உயிரிழந்துள்ளது
நேற்று காலை குழந்தைக்கு காய்ச்சல் இருந்தமையினால் பனடோல் கொடுக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 2 மணிக்கு காய்ச்சல் கடுமையாக இருந்தமையினால் குழந்தை மிருசுவில் பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேலதிக சிகிச்சைக்கு யாழ்ப்பாணம்மருத்துவமனைக்கு மாற்றபபட்ட போது குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் இறப்பு விசாரணையை மேற்கொண்டார்.
Discussion about this post