Thamilaaram News

29 - January - 2023 - Sun
Facebook Twitter Linkedin Instagram
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
Home இலங்கை

தமிழ் மக்களை அங்கீகரித்தாலே பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளலாம்! – கஜேந்திரகுமார் எம்.பி. தெரிவிப்பு

March 22, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
தமிழ் மக்களை அங்கீகரித்தாலே பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளலாம்! – கஜேந்திரகுமார் எம்.பி. தெரிவிப்பு
0
SHARES
Share on FacebookShare on Twitter

தேசிய பாதுகாப்பு என்ற விடயத்தில் தேசியம் என்பது என்ன? வெறுமனே சிங்கள மக்களை மட்டுமே பாதுகாப்பதுதான் தேசியமா? சிங்களவர்கள் தொடர்ச்சியாக பொய்களுக்கு ஏமாறுகின்றமையே இந்த நாடு வீழ்ச்சியடைய காரணம்.

இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்தச் சட்டமூல இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்களை முன்வைத்துள்ள நிலையில் முக்கியமாக இரண்டு விடயங்களை அடையாளப்படுத்த வேண்டும். தடுப்புக்காவல் காலத்தை குறைந்துள்ளமை மற்றும் நீதிபதி சிறைக்கும், தடுப்பு முகாம்களுக்கும் சென்று தடுப்புக்காவலில் உள்ளவர்களை பார்வையிடுவது போன்றவை சித்திரவதையை தடுக்கும் செயற்பாடாக இருக்கும். இவை இரண்டுமே குறிப்பிடத்தக்க மேம்பாடாகும். ஆனால் இவை நடைமுறை சாத்தியமாகும் விடயத்திலேயே அதன் தன்மை உறுதிப்படுத்தப்படும்.

இந்தத் திருத்தங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்த போதும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இது தொடர்பாக அதிருப்தியையே வெளிப்படுத்தியிருந்தார். பொறுப்புக்கூறல் விடயத்தில் கலப்பு நீதிமன்ற முறையை இலங்கை நிராகரித்து உள்ளகப் பொறிமுறையை வலியுறுத்தியமை, நாட்டின் இன முரண்பாடுகள் விடயத்தில் சட்டம் மற்றும் நீதிப்பொறிமுறையானது ஊழல் மிகுந்ததாக உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியிருந்தார். பக்கசார்பு, பாராபட்சம் காணப்படுவதாகவும், இது முழுமையான உள்ளக விசாரணைகளையோ நீதி பொறிமுறையையோ பலவீனப்படுத்தும் என்றும் கூறியிருந்தார்.

ஒரு தரப்பை மட்டுமே பாதுகாப்பது தேசியமா அல்லது சகல இன மக்களையும் பாதுகாப்பது தேசியமா? பெரும்பான்மையின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தீர்மானம் எடுப்பது தேசியம் ஆகாது. பெரும்பான்மையின் தேவைகளை பூர்த்தி செய்வது தேசியம் என அர்த்தப்படுத்த வேண்டாம். பல்வேறு அடையாளங்கள் இந்த நாட்டில் இருக்கின்ற நிலையில் பல்லினத்தன்மை கொண்ட நாடாக இலங்கை உள்ளதென நாம் கூறுகின்ற நிலையில் இரண்டு மூன்று இனங்கள் இந்த நாட்டில் வாழ்கின்ற சூழலில் சகலரதும் கருத்துக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டால் மட்டுமே அது தேசியமாக கருதப்படும்.

நீங்களே இந்த நாட்டின் உரிமைகளை பறிக்கும் விதமாக செயற்படுகின்றீர்கள் என்பது எவராலும் மறுக்க முடியாது. இந்த தேசம் ஒரு தரப்பை மட்டுமே ஏற்றுக்கொண்டு ஏனைய தரப்பை நிராகரித்துக்கொண்டுள்ளது. ஆனால் எம்மை தொடச்சியாக புறக்கணித்து எம்மை புறந்தள்ளிக்கொண்டுள்ளீர்கள். அவ்வாறான நிலையில் எவ்வாறு எமது மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்? எமது மக்கள் மறுக்கப்படுகின்ற நிலையில், எமது காணிகள் பறிக்கப்படுகின்ற நிலையில், எமது மத அடையாளங்கள் அழிக்கப்படுகின்ற நிலையில் நாம் என்ன செய்ய முடியும்? பிரதமர் மஹிந்த ராஜபக்ச வடக்குக்கு வந்த வேளையில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜனநாயக ரீதியில் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

புலம்பெயர் தமிழர்கள் உலகில் பல செல்வந்த நாடுகளில் உள்ளனர், அவர்களிடத்தில் இந்த நாட்டை மீட்கும் செல்வம் உள்ளது. அவர்களை இணைத்துக்கொண்டால் இன்றைய நெருக்கடி நிலைக்கு தீர்வு கிடைக்கும். ஆனால் அதற்கு நீங்கள் இடம் கொடுக்கவில்லை, இனவாதத்தை வளர்த்துக்கொண்டுள்ளீர்கள். நீங்கள் தமிழர்களை அங்கீகரித்து , தமிழர்கள் தனியான தேசம் என்பதை அங்கீகரித்து ஒரு கட்டமைப்பு மாற்றத்துக்கு தயாரானால், எமது மக்களின் முதலீடுகள் இந்த நாட்டை பொருளாதார ரீதியில் மீட்டெடுக்கும்.

இலங்கையில் இனவாதம் பரப்பப்பட்டுக்கொண்டிருக்கின்றது. சிங்கள மக்களுக்கு தொடர்ச்சியாக பொய்களை கூறிக்கொண்டுள்ளீர்கள். சிங்கள மக்களிடம் நான் சொல்வதும் அதுவே, நீங்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு பொய்களுக்கு ஏமாந்துவருகின்றீர்கள். அதுவே இந்த நாடு வீழ்ச்சியடைய காரணம் என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

Previous Post

10 Thailand Women that May Rock The Coming Year

Next Post

இன்றைய ராசிபலன்- 23.03.2022

Next Post
இன்றைய ராசிபலன்- 28.02.2022

இன்றைய ராசிபலன்- 23.03.2022

Discussion about this post

Stay Connected test

  • 87.1k Followers
  • 23.7k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

March 6, 2022
துயர் பகிர்வு –  திரு. கந்தைய்யா  தவபாலசந்திரன்

துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்

November 17, 2022
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

March 1, 2022
வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

March 26, 2022

திடீரென பற்றிய தீயினால் தும்பு தொழிற்சாலை எரிந்து நாசம்

ஜேர்மனியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – விமல் வீரவங்ச

கொரோனாவுக்கு மேலும் 34 பேர் பலி

யாழில் இளம் ஆசிரியைக்கும் கணவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய காணொளி!

யாழில் இளம் ஆசிரியைக்கும் கணவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய காணொளி!

January 29, 2023
துருக்கி – ஈரான் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

துருக்கி – ஈரான் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

January 29, 2023
குளிரால் 2,60,000 கால்நடைகள் உயிரிழப்பு

குளிரால் 2,60,000 கால்நடைகள் உயிரிழப்பு

January 29, 2023
02 வது திருமணத்திற்கு தயாரான சோனியா அகர்வால்- மாப்பிள்ளை யார்?

02 வது திருமணத்திற்கு தயாரான சோனியா அகர்வால்- மாப்பிள்ளை யார்?

January 29, 2023

Recent News

யாழில் இளம் ஆசிரியைக்கும் கணவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய காணொளி!

யாழில் இளம் ஆசிரியைக்கும் கணவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய காணொளி!

January 29, 2023
துருக்கி – ஈரான் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

துருக்கி – ஈரான் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

January 29, 2023
குளிரால் 2,60,000 கால்நடைகள் உயிரிழப்பு

குளிரால் 2,60,000 கால்நடைகள் உயிரிழப்பு

January 29, 2023
02 வது திருமணத்திற்கு தயாரான சோனியா அகர்வால்- மாப்பிள்ளை யார்?

02 வது திருமணத்திற்கு தயாரான சோனியா அகர்வால்- மாப்பிள்ளை யார்?

January 29, 2023
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.