போதைப் பொருள் கடத்திய குற்றச்சாட்டுக்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மலேசிய தமிழ் இளைஞர் ஒருவரின் மேன்முறையீடு சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
திட்டமிட்டபடி நகேந்திரம் தர்மலிங்கம் என்ற 34 வயது இளைஞன் தூக்கிலிடப்படுவார் என்று அவரது சட்டத்தரணி தகவல் வெளியிட்டுள்ளார்.
மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு போதைப் பொருளைக் கடத்த முற்பட்டபோது இவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழங்கு 2009ஆம் ஆண்டில் இருந்து நடைபெற்று வருகின்றது.
சிறையில் இருந்த இளைஞர் உளநிலை பாதிக்கப்பட்டுத் தற்போது சித்த சுவாதீனமற்றவராகக் காணப்படுகின்றார்.
உளநிலையை அடிப்படையாகக் கொண்டு அவரைத் தூக்கிலிடக் கூடாது என்று உயர் நீதிமன்றில் கடந்த நவம்பர் மாதம் மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. அதனால் அவரது தூக்குத் தண்டனை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
தற்போது இந்த மேன்முறையீடு உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இளைஞரின் உளநிலை பாதிக்கப்பட்டமைக்காக எந்த மருத்துவ ரீதியான ஆதாரங்களும் இல்லை என்று உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
Discussion about this post