Saturday, May 24, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home தொழில்நுட்பம்

டிவிட்டரின் லோகோ மற்றும் பெயரை மாற்றும் மஸ்க்!

July 25, 2023
in தொழில்நுட்பம், முக்கியச் செய்திகள்
டிவிட்டரின் லோகோ மற்றும் பெயரை மாற்றும் மஸ்க்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

டிவிட்டரில் தனது அடுத்த அதிரடியாக நீல நிற பறவை லோகோவை கறுப்பு நிற எக்ஸ் ஆக மாற்றப் போவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

டிவிட்டர் நிறுவனத்தை, அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் வாங்கியதில் இருந்தே பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். சரிபார்க்கப்பட்ட கணக்குகளுக்கு தரும் ப்ளூ டிக்கிற்கு கட்டணம் விதித்தார்.

டிவிட்டரில் இருந்து நீக்கப்பட்ட அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் உள்ளிட்டோரை மீண்டும் சேர்த்தார். அதோடு செலவு குறைப்பு என்ற பெயரில் பல ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பினார்.

இப்படி தொடர்ச்சியான மாற்றங்களை செய்து வரும் மஸ்க் தனது அடுத்த அதிரடியாக டிவிட்டர் லோகோ, மற்றும் பெயரை மாற்றப் போவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவரது டிவிட்டர் பதிவில்,

‘விரைவில் எல்லா நீல நிற பறவைகளுக்கு விடுதலை தரப்படும். டிவிட்டரின் லோகோ எக்ஸ் என மாற்றப்படும். இன்று இரவு எக்ஸ் லோகோ வெளியிடப்பட்டு, நாளை உலகம் முழுவதும் நேரடி பயன்பாட்டிற்கு அனுப்புவோம்.

இந்த மாற்றம் எப்போதோ செய்திருக்க வேண்டியது’ என அவர் குறிப்பிட்டுள்ளார். அதே போல, கறுப்பு நிற பின்னணியில் எக்ஸ் லோகோ மற்றும் பெயர் குறித்து குறும் வீடியோவையும் எலான் மஸ்க் வெளியிட்டார்.

அதேவேளை டிவிட்டரின் நீண்ட கால அடையாளமாக நீல நிற பறவை லோகோ இருந்து வருகிறது. கடந்த ஏப்ரலில் கிரிப்டோகரன்சியான டாகிகாயினின் சிபா இனு நாய் படத்தை டிவிட்டர் லோகோவாக மஸ்க் மாற்றினார்.

சிறிது நேரத்தில் அது மீண்டும் நீல நிற பறவையாக மாற்றப்பட்டது. ஆனால் எக்ஸ் குறியீடு மஸ்க்கின் மிக விருப்பமான லோகோவாகும். அதுமட்டுமின்றி டிவிட்டர் நிறுவனத்தை வாங்கிய ஆரம்பத்தில் இருந்தே எக்ஸ் தளமாக டிவிட்டரை மாற்றப் போவதாக மஸ்க் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags: #ElonMusk#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#Twitter
Previous Post

10 ரூபாய்க்கு கோழி பிரியாணி;

Next Post

விற்பனைக்கு வந்த இந்திய முட்டைகள்!

Next Post
விற்பனைக்கு வந்த இந்திய முட்டைகள்!

விற்பனைக்கு வந்த இந்திய முட்டைகள்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.