ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் சோதிடரான அநுராதபுரத்தைச் சேர்ந்த ஞானக்காவின் வீட்டை போராட்டக்காரர்கள் நேற்றிரவும் முற்றுகையிடுவதற்கு முயற்சித்துள்ளனர்.
இதனால் இராணுவத்தினரைக் களமிறக்கி நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா, ஞானக்காவின் வீட்டை முற்றுகையிடச் சென்றபோது பொலிஸாரால் தடுக்கப்பட்டிருந்தார்.
நேற்றுமுன்தினம் இரவு பொதுமக்கள் தன்னெழுச்சியாக ஒன்றிணைந்து ஞானக்காவின் வீட்டை நோக்கி பேரணியாகச் சென்றனர். பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் அதைத் தடுத்து நிறுத்தினர்.
இந்த நிலையில் நேற்று இரவும் அவரது வீட்டை முற்றுகையிடுவதற்கு போராட்டக்காரர்கள் முயன்றுள்ளனர்.
Discussion about this post