சைனோபாம் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களில் 95 சதவீதமானோருக்கு நோய்
எதிர்ப்பு சக்தி அதிகரித்து வருவதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால்
மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
அதனடிப்படையில் சைனோபாம் தடுப்பூசி, டெல்டா மற்றும் பீடா வைரஸில்
இருந்து பூரண பாதுகாப்பு அழிப்பதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின்
நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூற்று மருத்துவப்பிரிவின் பணிப்பாளர் விசேட
வைத்திய நிபுணர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
உலகளாவிய ரீதியில் பரவிவரும் டெல்டா திரிபுக்கு எதிராக சிறப்பாக
செயற்படக் கூடியது என அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
Discussion about this post